tamil oodaga peravai arul thanthai jagath gaspar raj 2G spectrum scandal
பாதிரிக்கு பதில்கள்:
தமிழ் ஊடக பேரவை என்ற பெயரில் ஸ்பெக்ட்ரம் ராஜா மீதான ஊழல் குற்றசாட்டை எதிர்த்து பேசிய பாதிரிக்கான பாசறை வலைபூவின் பதில்கள் இதோ..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர் : "நான் சிறுவயதில் இருக்கும்போது என் தமிழாசிரியர் எனக்கொரு கதை சொன்னார் “ஞானப் பழத்தைப் பெற முருகனுக்கும், பிள்ளையாருக்கும் போட்டி நடந்தது. முருகன் உலகைச் சுற்றக் கிளம்பினான். பிள்ளையாரோ தாய், தந்தையே உலகமென சுற்றி வந்து பழம் பெற்றுக் கொண்டான்” எனக் கூறிவிட்டு சொன்னார், “நமக்கு கிடைக்க வேண்டியதைத் தேடி ஊர் உலகத்தைச் சுற்றினால் கிடைக்காது, சுற்ற வேண்டியவர்களைச் சுற்றினால்தான் கிடைக்கும்” என்றார்."
அதிமுக பாசறை : மிக சரியாக சொன்னிர்கள் பாதிரி இந்த டெக்னிக் உங்களுக்குத்தான் கை வந்த கலை ஆயிற்றே.. இல்லாவிட்டால் 4 வருடங்களுக்கு முன்பு தமிழ் மக்களுக்கு யாரென்றே தெரியாமல் இருந்த நீங்கள் இந்த அளவுக்கு வளரமுடியுமா?
நீங்கள் யாரை சுற்றினீர்கள் என்பது தான் உலகம் அறிந்த உண்மை ஆயிற்றே..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: அதுபோல ஆங்கிலச் சேனல்கள் அனைத்தும் அமைச்சர் ஆ.ராசா அவர்களைச் சுற்றி வளைத்து குற்றவாளியாகச் சித்தரிக்கிறது. நாங்கள் இதுபோன்ற விழாவிற்கு வந்து இப்படிப் பேசுவதால் எங்களுக்கும் இதில் பேரம் பேசப்பட்டிருக்கும் என நினைக்கக்கூடத் தோன்றும்.
அதிமுக பாசறை: உங்கள் உள் மனதில் இருப்பது மக்களுக்கும் தோன்றத்தானே செய்யும்..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: ஆ.ராசாவை இரண்டு விசயங்களில் எனக்குப் பிடிக்கும்.
அதிமுக பாசறை: என்னவென்று எங்களுக்கு தெரியும்..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: ஒன்று சமூக நீதி அரசியலை பெரியாரின் தொண்டனாக இருந்து ஆழமாக நேசிப்பதும், மற்றொன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தன்னாலும் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற அவரது மனநிலை.
அதிமுக பாசறை: நல்லவேலை பெரியார் உயிருடன் இல்லை,என்ன பாதிரி சொல்கிறீர்கள்.. தி நியுயார்க் டைம்ஸில் அவர் பெயர் ஊழலுக்காக வந்ததை உயர்ந்த நிலை என்று நீங்கள் கருதுகிறீர்களா? தாழ்த்தப்பட்ட சமுகத்தை இதில் இழுத்து அந்த சமுகத்தை கலங்கப்படுத்தாதீர்கள்..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர்:கடந்த 2003 முதல் 2010 வரையில் ஸ்பெக்ட்ரமின் தணிக்கை அறிக்கை அலசி ஆராயப்பட்டது. 2008-ல் நடந்த 2G-ஸ்பெக்ட்ரம் அறிக்கையான இதில் மட்டும் ஏன் குடைகிறார்கள் என்றால் இந்த ஆடிட்டருக்கு இதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதைத்தானே காட்டுகிறது.
அதிமுக பாசறை: நிச்சயமாக ஆடிட்டருக்கு உள்நோக்கம் உண்டு. ஆம், அது என்னவென்றால் ஊழல் செய்யப்பட்ட 176000000000 ரூபாய் மக்கள் பணத்தை திருடர்களிடமிருந்து அரசுக்கு திரும்ப பெற்றுத்தரவேண்டும் என்ற உள்நோக்கம் தான்..உங்கள் உள்நோக்கங்களையும் நாங்கள் அறிவோம்..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: ஒரு மனிதன் குற்றவாளி என்றால் முதலில் குற்ற அறிக்கை பதிவு செய்து சி.பி.ஐ. - யிடம் ஒப்படைக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணை முடிந்த பிறகுதான் குற்றவாளி என அறிவிக்க வேண்டும்.
அதிமுக பாசறை: பாதிரி மேல் மட்டங்களிலேயே இருந்து பழகிவிட்டதால் மக்கள் மத்தியில் நடக்கும் நிகழ்வுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அரசியல் பின்புலம் இல்லாத சாதரண மக்கள் 1000, 2000 திருடிவிட்டதாக குற்றம் சாட்டினால் கூட அவர்கள் மீது காவல் துறையின் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்கள் நடத்தப்படும் முறை என்ன என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாத நிலையில் டிஸ்கவரி சேனலில் செந்நாய்கள் மானைக் கடித்துக் குதறுவது போல் ஆ.ராசா விசயத்தில் நடப்பது நியாயமில்லாத, தர்மமில்லாத ஒன்றாகும்.
அதிமுக பாசறை: அவர் துறையில் ஊழல் என்றால் அவர் அதான் அதற்கு பொருப்பு, அவரை குற்றம் சாட்டாமல் வாயுபகவானையா குற்றம்சாட்டமுடியும்..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: நம் இந்தியாவில் இரண்டு மாயைகளை உடைக்க வேண்டும். ஒன்று நீதி அமைப்பை எவனும் கேள்வி கேட்கக் கூடாது. இரண்டாவது ஊடகம் எது சொன்னாலும் கேள்வி கேட்கக் கூடாது என்பதே.
அதிமுக பாசறை: ஆம் ஏதோ கொஞ்சம் நெஞ்சம் இருப்பதை காப்பது நீதி மன்றம் தானே அதையும் உடைத்துவிட்டல் எளிதில் நாட்டை மொத்தமாக சுரண்டி விடலாம்..ஆமாம் இது நீதி மன்ற அவமதிப்பு இல்லையா..
கரக்ட்டா சொன்னிங்க தமிழ்நாட்டு ஊடகங்கள் சொல்வதை கேட்க்கவே கூடாது..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: இந்த ஆங்கில மீடியாக்கள் உள்ளுக்குள் பல அசிங்கமான ஊழல்களையும், அரைகுறை உண்மைகளையும் வைத்துக்கொண்டு நிஜங்களை மறைத்து செயல்படுகின்றன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்காக இன்று ஆடுகின்றன. இந்த மீடியாக்களைக் கேட்கிறேன் நீங்கள் ஒழுக்கமானவர்கள் என்றால் மற்றவர்களைப் பற்றி தீர்ப்பு எழுதுங்கள். ஆனால் நீங்களே ஒழுக்கம் இல்லாதபோது மற்றவரைக் குறை சொல்வதேன்.
அதிமுக பாசறை: உங்கள் கையிலும்தான் மீடியாக்கள் உண்டே ஆங்கில மீடியக்கள் மீதான அந்த அசிங்கமான ஊழல்களை மக்கள் மத்தியில் எடுத்து வைக்க வேண்டியது தானே..அசிங்கமானவர்களுக்கு அசிங்கமான ஊழல்கள் தெரிந்தாலும் தெரிய வாய்ப்பு உள்ளது..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: 2G அலைக்கற்றையால் வரும் வருமானத்தைக் கொண்டு நாட்டு வளர்ச்சிக்கு அளிக்க வேண்டும் என உடன்பாடு உள்ளது.
அதிமுக பாசறை: உங்களின் நாடு எது என்பது அனைவரும் அறிந்ததே..உங்களின் நாடு சிலரின் வீடு என்பதும் எங்களுக்கு தெரியும்..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: 2011-ம் ஆண்டுக்குள் 60 கோடி மக்களுக்கு தொலைபேசி இணைப்புப் பெற வேண்டும். ஆ.ராசா பதவிக்கு வந்த பின் 71 கோடியாக இணைப்புகள் பெருகியுள்ளன.
அதிமுக பாசறை: அது தொழிற்நுட்பத்தினால் ஏற்பட்ட வளர்ச்சி என்பது என்பது கூட தெரியாத தற்குறியா இருக்கிறீர்களே பாதிரி..
அருட்தந்தை ஜெகத் கஸ்பர்: திட்டக்குழுவின் கொள்கைப்படி நடக்கும் ஆ.ராசாவைக் குற்றம் சாட்டுவது சரியான முறையல்ல. இந்த ஊடகத்திற்குள் ஜாதி, மத அரசியல், பண அரசியல் இருக்கிறது. நேர்மையான ஊடகமாக இவர்கள் இருப்பதில்லை. திட்டக்குழுவின் கொள்கைப்படி நேர்மையான வழியில் நடந்த ராசா அவர்கள் கூட்டுக்கொள்ளைக் கூட்டத்தை உடைத்த காரணத்திற்காக சிதைக்கப்படுகிறார்.
அதிமுக பாசறை: திட்டமிட்டு ஊழல் செய்ததாகத்தானே ஊடகங்கள் சொல்கின்றன அதைத்தானே நீங்களும் சொல்கிறீர்கள், அந்த திட்டமிட்ட குழுக்கள் யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்..
நாம் அறிந்தவரையில் "பாதிரி" என்பது மதிப்பு மிக்க பெயர் ஆனால் இவரின் நடவடிக்கைகள் இவரை "போலி பாதிரியோ" என சந்தேகப்பட வைக்கின்றன..
No comments:
Post a Comment